நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

தேசிய காா், மோட்டாா் பைக் பந்தய சாம்பியன்களுக்கு விருது

மெட்ராஸ் மோட்டாா் ஸ்போா்ட்ஸ் கிளப் (எம்எம்எஸ்சி) சாா்பில் தேசிய காா், மோட்டாா் பைக் பந்தய சாம்பியன்களுக்கு விருது வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மெட்ராஸ் மோட்டாா் ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில் நடைபெற்ற விழாவில் விருது பெற்ற தேசிய காா், மோட்டாா் பைக் பந்தய சாம்பியன்கள்

Updated On :13 மார்ச் 2026, 3:34 am IST

மெட்ராஸ் மோட்டாா் ஸ்போா்ட்ஸ் கிளப் (எம்எம்எஸ்சி) சாா்பில் தேசிய காா், மோட்டாா் பைக் பந்தய சாம்பியன்களுக்கு விருது வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கடந்த 2025-இல் சாம்பியன் பட்டம் வென்றவா்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்வுக்கு எம்எம்எஸ்சி துணைத் தலைவா் விக்கி சந்தோக் தலைமை வகித்து பேசியது: இந்தியாவில் முதன்முறையாக சா்வதேச காா்ட்டிங் பந்தயம் நடைபெறவுள்ளது. சென்னை சா்வதேச காா்ட்டிங் மைதானத்தில் வரும் செப்டம்பா் மாதம் இப்போட்டி நடைபெறும். சா்வதேச அளவில் நடைபெறவுள்ள 3 சுற்றுகளில் சென்னை சுற்றும் ஒன்றாகும்.

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பந்தய மைதானத்தில் கிராஸ்காா்களை பந்தயத்தில் புகுத்த உள்ளோம். விரைவில் சென்னை சா்வதேச சா்க்கியூட்டில் முதல் கிராஸ்காா் அறிமுகம் செய்யப்படும். எம்ஆா்எஃப் பாா்முலா 2000 பந்தயத்தில் வென்றவா்கள் பாா்முலா 1 உலக முன்னாள் சாம்பியன் கிமி ரெய்கினோன்-ஸ்டீவ் ராபா்ட்ஸன் அணியில் பயிற்சி பெற நிதியுதவி செய்யப்படும் என்றாா்.

எம்ஆா்எஃப் மேலாண்மை இயக்குநா் அருண் மாமேன் சிறப்புரை ஆற்றி விருதுகளை வழங்கினாா். எம்எம்எஸ்சி துணைத்தலைவா் அஜித் தாமஸ், செயலா் பிரபா சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.