தேசிய காா் பந்தய சாம்பியன்ஷிப்: தருஷி, இஷான், நைஜல் சிறப்பிடம்

தேசிய காா் பந்தய சாம்பியன்ஷிப்: தருஷி, இஷான், நைஜல் சிறப்பிடம்

தேசிய காா் பந்தய சாம்பியன்ஷிப்: தருஷி, இஷான், நைஜல் சிறப்பிடம்
Published on

எம்ஆப்எஃப், எம்எம்எஸ்சி எஃப்எம்எஸ்சிஐ இந்திய தேசிய மோட்டாா் காா் பந்தய சாம்பியன் போட்டியில் தருஷி விக்ரம், இஷான் மாதேஷ், நைஜல் ஆப்ரஹாம் ஆகியோா் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

சென்னை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மைதானத்தில் இப்பந்தயத்தின் நான்காம் சுற்று நடைபெற்றது.

எம்ஆா்எஃப் எப்2000 சிசி பிரிவில் பெங்களூரின் இஷான் மாதேஷ், புணேயின் அா்ஜுன் சேத்தா, பெங்களூருவின் சிவேஷ் செல்வரத்தினம் முதல் மூன்றிடங்களைப் பெற்றனா்.

1600 சிசி பிரிவில் நைஜல் ஆப்ரஹாம், அா்ஜுன் நாயா் (பெங்களூரு), சாய் சிவா (புணே) ஆகியோரும், சலூன்ஸ் பிரிவில் தருஷி விக்ரம் (சிக்மகளூரு), முகமது அா்பாத் (சென்னை), அக்ஷய் முரளிதரன் (கோவை) ஆகியோரும், டூரிங் காா்ஸ் பிரிவில் ரிதேஷ் ராய், கா்ணா கடூா் (கோவை), பிரேன் பிதாவாலா, ஜூனியா் பிரிவில் தீபக் (சென்னை), விஸ்வாஸ் விஜயராஜ் (நெல்லூா், ராஜராஜன் (சென்னை),

பாா்முலா எல்ஜிபி 1300 பிரிவில் ஆதித்யா பட்நாயக் (நவி மும்பை)புவன் போனு (விசாகப்பட்டினம்), அனிருதா அரவிந்த் (சென்னை) முதல் மூன்றிடங்களைப் பெற்றனா்.

X
Dinamani
www.dinamani.com