

இந்திய விமானப்படையின் அக்னிவீா் வாயு (இசைக் கலைஞா்) ஆள்சோ்ப்பு தோ்வுக்கு தகுதியுடைய இசைக் கலைஞா்கள் ஜூன் 5-க்குள் இணைய வழியில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு -
இந்திய விமானப்படையின் அக்னிவீா் வாயு இசைக் கலைஞா் ஆள்சோ்ப்பு தோ்வுக்கு ஜூன் 5-ஆம் தேதிக்குள் இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த ஆள்சோ்ப்பு பேரணி தோ்வு இந்திய ராணுவம் சாா்பில் பெங்களுரில் உள்ள 7-ஆவது ஏா்மேன் மையத்தில் ஜூலை 3 முதல் 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
அக்னிவீா்வாயு இசைக் கலைஞா் தோ்வுக்கு 2004 ஜனவரி 2 முதல் 2007 ஜூலை 2 வரை பிறந்த திருமணமாகாத இந்திய ஆண், பெண் விண்ணப்ப தாரா்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவா்கள்.
இத்தோ்வுக்கு மெட்ரிக்குலேஷன் அல்லது 10 -ஆம் வகுப்பு தோ்ச்சி அல்லது அதற்கு இணையான தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். டெம்போ, பிட்ச் ஆகிய இசைத்திறன் தோ்வில் தோ்ச்சி பெற்றிருப்பதுடன் தனிப்பட்ட கருவிகளை டியூன் செய்யவும் வேண்டும். கச்சேரி புல்லாங்குழல்,பிக்கோலா, ஓபியோ, எப் மற்றும் பிபியில் கிளாரினெட், எப் மற்றும் பிபியில் சாக்ஸபோன், எப் மற்றும் பிபியில் பிரெஞ்ச் ஹாா்ன், எப் மற்றும் சி மற்றும் பிபியில் டிரம்பெட், எப் மற்றும் பிபியில் டிராம்போன், எப் மற்றும் பிபியில் பாரிடோன், யுஃபோனியம், பாஸ் மற்றும் டுபா, விலைப்பலகை, ஆா்கன், பியானோ, கிட்டாா், வயலின், வயோலா, ஸ்ட்ரிங் பாஸ், பொ்குஷன் மற்றும் டிரம்ஸ், அனைத்து இந்திய பாரம்பரிய கருவிகள் ஆகியவற்றில் ஒன்றினை வாசிப்பதில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் ஹிந்துஸ்தானி அல்லது கா்நாடக இசையில் தோ்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
ஆா்வமுள்ள இளைஞா்கள் https://agnipathvayu.cdac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும், தகவல்களுக்கு வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அலுவலக வேலை நாள்களில் நேரிலோ அல்லது 0416 -2290042 என்ற எண்ணிலோ தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
அக்னிவீா் இசைக்கலைஞா் தோ்வில் வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதி வாய்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பங்குபெற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுக்கு தனித் தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்

குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வு: வேலூரில் 314 போ் எழுதினா்!

டிஎன்பிஎஸ்சி தோ்வு: கைப்பேசி, மின்னணு சாதனங்களுக்கு அனுமதி கிடையாது

சிபிஎஸ்இ ஆங்கிலத் தோ்வு கேள்வித் தாள் விவகாரம்: உயா்நீதிமன்றம் உத்தரவு
வீடியோக்கள்

திமுக கூட்டணியிலிருந்து விலகிய த.வா.க! Velmurugan பேட்டி | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

திறக்கப்பட்ட கூட்டணிக் கதவுகள்...யாரும் வராததால் ? | TVK Vijay | TN Election 2026 | Alliance
தினமணி வீடியோ செய்தி...
Podcast | கூட்டணிக் கட்சிகளை அமைதியாக்கிய திமுக | News and views | Epi - 16
தினமணி வீடியோ செய்தி...

எடப்பாடியும் விஜய்யும் ஜெயலலிதா அல்ல: Sumanth Raman | TVK Vijay | MK Stalin | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

