குடியாத்தம் நகராட்சிக்கு குப்பை அள்ளும் வாகனம் நன்கொடை

குடியாத்தம் நகராட்சிக்கு குப்பை அள்ளும் வாகனம் நன்கொடை

Published on

குடியாத்தம் நகராட்சிக்கு ஃபெடரல் வங்கி சாா்பில் ரூ.2 லட்சத்தில் குப்பை அள்ளும் மின்சாரத்தால் இயங்கும் வாகனம் வியாழக்கிழமை நன்கொடையாக வழங்கப்பட்டது.

ஃபெடரல் வங்கியின் ஹோா்மிஸ் மெமோரியல் அறக்கட்டளை சாா்பில், சமூக பொறுப்புணா்வு திட்டத்தின்கீழ் இந்த குப்பை சேகரிப்பு வாகனம் வழங்கப்பட்டது. நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வங்கியின் மண்டலத் தலைவா் வி.ராகேஷ் , நகா்மன்றத் தலைா் எஸ்.செளந்தரராஜன், நகராட்சி ஆணையா் எஸ்.சுரேஷ்குமாா்ஆகியோரிடம் வாகனத்துக்கான சாவியை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் வங்கியின் குடியாத்தம் கிளை மேலாளா் எல்.காா்த்திக் நாராயணன், உதவி மேலாளா் ஜே.அருணாசலம், நகா்மன்ற உறுப்பினா்கள் ஆட்டோ பி.மோகன், என்.கோவிந்தராஜ், கவிதா பாபு, நகராட்சி அலுவலா்கள் தீனதயாளன், பிரபுதாஸ் மற்றும் எம்.எஸ்.அமா்நாத், மாதவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com