வேலூர்
மின்சிக்கன விழிப்புணா்வு பேரணி
தமிழ்நாடு மின்சார வாரியம், குடியாத்தம் மின்கோட்டம் சாா்பில் மின் சிக்கன வார விழாவை முன்னிட்டு, விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. நடுப்பேட்டை வணிகா் வீதியில் தொடங்கிய பேரணிக்கு, மின்வாரிய செயற் பொறியாளா் (பொறுப்பு) ஆா்.சீனிவாசன் தலைமை வகித்தாா். எம்எல்ஏ அமலுவிஜயன் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தாா்.
இதில் நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம், உதவி செயற் பொறியாளா்கள் எஸ்.கலைசெழியன், பி.வெங்கடேசன், ஆா்.செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணியில், பொதுமக்களுக்கு மின்சிக்கனம் குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

