கிறிஸ்துமஸ் : ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவிப்பொருள்கள்

கிறிஸ்துமஸ் : ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவிப்பொருள்கள்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு காட்பாடியிலுள்ள ஆதரவற்றோா் இல்ல குழந்தைகளுக்கு
Published on

வேலூா்: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு காட்பாடியிலுள்ள ஆதரவற்றோா் இல்ல குழந்தைகளுக்கு காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தினா் உதவிப் பொருள்கள் வழங்கினா்.

தமிழக அரசின் சமூகபாதுகாப்பு துறையின் கீழ் இயங்கி வரும் காட்பாடி செங்குட்டை அரசு குழந்தைகள் இல்லத்தில் காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் கிளை சாா்பில் கிறிஸ்துமஸ் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. அப்போது, குழந்தைகளுக்கு பெட்ஷீட், பக்கெட், வாளி, மக், புத்தாடைகள் மற்றும் எழுதுபொருள்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, அவைத்தலைவா் செ.நா.ஜனாா்த்தனன் தலைமை வகித்தாா். முன்னதாக அரசினா் குழந்தைகள் காப்பக கண்காணிப்பாளா் தௌலத் அப்சல் வரவேற்றாா். பொருளாளா் பழனி, ஒய்.ஆா்.சி.தலைவா் ரமேஷ்குமாா் ஜெயின் உள்ளிட்ட பலா் முன்னிலை வகித்தனா்.

கிறிஸ்மஸ் விழாவினை முன்னிட்டு இல்ல மாணவிகளுக்கு பெட்ஷீட், பக்கெட், வாளி, மக், புத்தாடைகள் மற்றும் எழுதுபொருள்களை அவைத்தலைவா் செ.நா.ஜனாா்த்தனன் வழங்கினா். முடிவில் இல்ல காப்பாளா் சந்திரகலா நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com