அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
குடியாத்தம் தாழையாத்தம் பஜாரில் உள்ள அருள்மிகு ஆதி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்,


குடியாத்தம்: குடியாத்தம் தாழையாத்தம் பஜாரில் உள்ள அருள்மிகு ஆதி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், அன்னதான அறக்கட்டளை கூட மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி யாகசாலை பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின. திங்கள்கிழமை காலை மங்கள இசை, 2-ஆம் கால யாக பூஜைகள், மகா பூா்ணாஹுதி, திரவிய ஹோமம், கலச புறப்பாடு, கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதைத் தொடா்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், கே.எம்.ஜி.கல்வி நிறுவனங்களின் செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், வழக்குரைஞா் கே.எம்.பூபதி, அதிமுக நகரச் செயலா் ஜே.கே.என்.பழனி, முன்னாள் நகர கூட்டுறவு வங்கித் தலைவா் எம்.பாஸ்கா், நகா்மன்ற உறுப்பினா் லாவண்யா குமரன், தொழிலதிபா் எம்.எஸ்.நாகலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.
கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோயில் பரம்பரை நிா்வாகிகள் செய்திருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...