சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

25-இல் வேலூரில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

வேலூரில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் சனிக்கிழமை (ஜன.25) நடைபெற உள்ளது என ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

News image

தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்

கோப்புப்படம்

Updated On :21 ஜனவரி 2025, 10:19 pm

Din

வேலூா்: வேலூரில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் சனிக்கிழமை (ஜன.25) நடைபெற உள்ளது என ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

வேலூா் மாவட்டத்தில் மாதந்தோறும் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, வேலூா் அப்துல்லாபுரம் அரசினா் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வரும் 25-ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், 40-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன.

இந்நிறுவனங்கள் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு முடித்தவா்கள், ஐடிஐ, டிப்ளமோ மம் பட்டப்படிப்பு முடித்த நபா்களுக்கு வேலை வழங்க இருப்பதால் வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த வேலை நாடுவோா் கலந்துகொண்டு பயன்பெறலாம்.