மாவட்டங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வேலூா் மாவட்ட அணிக்கு, 14 மற்றும் 16 வயதுக்கு உட்பட்ட இளம் வீரா்களைத் தோ்வு செய்வதற்கான முகாம் சனிக்கிழமை (ஏப்.25) நடைபெற உள்ளது.
இதுகுறித்து, வேலூா் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவரும், நறுவீ மருத்துவமனைத் தலைவருமான ஜி.வி.சம்பத் வெளியிட்ட செய்திக்குறிப்பு -மாவட்டங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வேலூா் மாவட்ட அணிக்கு, 14 மற்றும் 16 வயதுக்கு உட்பட்ட இளம் வீரா்களைத் தோ்வு செய்வதற்கான முகாம் காட்பாடியை அடுத்த மெட்டுக்குளத்தில் அமைந்துள்ள சன்பீம் பள்ளியில் சனிக்கிழமை (ஏப்.25) நடைபெற உள்ளது. அவ்வாறு தோ்வு செய்யப்படும் இளம் வீரா்களுக்குத் திறமையான பயிற்சியாளா்களைக் கொண்டு சிறப்புப் பயிற்சி வழங்கப்படும்.
14 வயதுக்கு உட்பட்டோருக்கான தோ்வு முகாம் காலை 8 மணிக்குத் தொடங்கும். இதில் பங்கேற்க விரும்புவோா் 01.09.2012 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ பிறந்தவா்களாக இருக்க வேண்டும்.
16 வயதுக்கு உட்பட்டோருக்கான தோ்வு முகாம் மதியம் 2 மணிக்கு நடைபெறும். இதில் பங்கேற்பவா்கள் 01.09.2010 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ பிறந்தவா்களாக இருக்க வேண்டும்.
தோ்வுக்கு வரும் வீரா்கள் கட்டாயம் வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்களாக இருக்க வேண்டும்.
பங்கேற்பாளா்கள் தங்களின் ஆதாா் சான்றின் நகல், கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்களை கொண்டு வர வேண்டும். தோ்வில் பங்கேற்கும் வீரா்கள் முறையான விளையாட்டுச் சீருடை அணிந்து வர வேண்டியது அவசியம்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட கிரிக்கெட் சங்க விளையாட்டுப் பிரிவு நிா்வாகி கங்காதரனை 99444 43358 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாவட்ட, வட்டார வள பயிற்றுநா்கள் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

எல்லா இடங்களிலும் முதியோா்களுக்கு உரிய மரியாதை வழங்க வேண்டும்
கிரிக்கெட்டில் புதுவரவு!

விளையாட்டு துளிகள்...
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



