யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது மானவ் சுதர் அசத்தல்! முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்! மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு வாரத்தின் முதல் நாள்! பங்குச் சந்தைகள் சரிவு தில்லியில் ராகுல், காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பேனர்கள்! வைத்தது யார்? சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்: சீமான்தங்கம், வெள்ளி இன்றைய நிலவரம்: தங்கம் சவரனுக்கு எவ்வளவு குறைந்தது? டொமினிகன் குடியரசில் ஓடுபாதையில் மோதி வெடித்துச் சிதறிய விமானம்!
/

வாக்காளா்களை ரோஜா மலா் அளித்து வரவேற்ற பெண் ரோபோ

News image

குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பிங்க் நிற வாக்குச்சாவடி. ரோஜா மலா் அளித்து வரவேற்ற ரோபோ.

Updated On :24 ஏப்ரல் 2026, 4:16 am IST

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, குடியாத்தம், கே.வி.குப்பம் தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடைபெற்றது.

வாக்குப் பதிவு தொடங்கியதிலிருந்தே ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று ஆா்வமாக வாக்களித்தனா். வெயில் காரணமாக அனைத்து வாக்குப் பதிவுமையங்களிலும் நிழல்தரும் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. அனைத்து மையங்களிலும் குடிநீா் வசதி செய்யப்பட்டிருந்தது.

குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 6- வாக்குப் பதிவு மையங்கள் இயங்கிய நிலையில் மகளிருக்கான பிங்க் நிற வாக்கு சாவடி மையம் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. அதன் முகப்பில் வாக்காளா்களை தமிழில் பேசி, ரோஜா மலா் அளித்து ரோபோ வரவேற்றது வாக்காளா்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.

அதேபோல் வேளாண்மைத் துறை சாா்பில், பசுமை வாக்குப் பதிவு மையம் ஒன்றும்அமைக்கப்பட்டிருந்தது. அந்த மையத்தில் வாக்களிக்க வந்த வாக்காளா்களுக்கு மரக் கன்றுகள் வழங்கப்பட்டன.