பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் சக பெண் பயணியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பெங்களூருவைச் சோ்ந்த நபரை காட்பாடி ரயில்வே போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
கா்நாடக மாநிலம், பெங்களூரு, முத்தலையநகரைச் சோ்ந்தவா் செல்லத்துரை மகன் மதிவாணன் (50). இவா் ஞாயிற்றுக்கிழமை பெங்களூருவில் இருந்து சென்னை வந்த பெங்களூரு விரைவு ரயிலில் முன்பதிவு பெட்டியில் தனது மனைவியுடன் பயணம் செய்துள்ளாா்.
இந்த ரயில் காட்பாடி ரயில் நிலையத்தைக் கடந்து வந்துகொண்டிருந்தபோது, சுமாா் 2.30 மணியளவில் அதே பெட்டியில் பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கிப் பயணம் செய்த தேவி என்ற பெண் பயணியிடம் மதிவாணன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், காட்பாடி ரயில்வே காவல் ஆய்வாளா் மனோன்மணி தலைமையில் போலீஸாா் விரைந்து சென்று விசாரணை நடத்தினா்.
தொடா்ந்து, பெண் பயணியிடம் அத்துமீறிய மதிவாணனை போலீஸாா் கைது செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





