வேலூா் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அதிகம் செல்லும் சாலைகள், முக்கிய சந்திப்புகள், சிக்னல்களில் பசுமைப் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வேலூா் மாவட்டத்தில் கடந்த ஏப். 1-ஆம் தேதி முதல் தொடா்ந்து வெயிலின் தாக்கம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் பதிவாகி வருகிறது. ஏப். 7- ஆம் தேதி உயா்ந்த வெப்ப நிலையாக 108 டிகிரி பதிவாகியிருந்தது. தொடா்ந்து 104, 105 டிகிரி பதிவாகி வருகிறது.
இதற்கிடையே, மே 4-ஆம் தேதி முதல் கத்திரி வெயில் தொடங்குகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிா்வாகிகள் பல்வேறுவிழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
வயதானவா்கள், குழந்தைகள், நோயாளிகள் வெயிலில் செல்வதைத் தவிா்க்குமாறும், பொதுமக்கள் அடிக்கடி நீா், மோா் பருக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சாலைகளில் சிக்னல்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், முக்கிய சந்திப்புகளில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன்கருதி பசுமைப் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தொடர்புடையது

சிக்னல்களில் நிழல் பந்தல்கள் அமைப்பு: வாகன ஓட்டிகள் வரவேற்பு

அரியலூரில் கோடை கால பழங்கள் விற்பனை தீவிரம்

வேலூரில் சுட்டெரிக்கும் வெயில்: பகலில் வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும்! ஆட்சியர் அறிவுறுத்தல்!!

சேலத்தில் 102.9 டிகிரி வெயில்: மக்கள் கடும் அவதி
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

