தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் 2- வது நாள் மாநாடு தொடங்கியது!சென்னையிலிருந்து வடமாநிலம் செல்லும் 6 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றம்
/

போ்ணாம்பட்டில் ஆலங்கட்டி மழை

போ்ணாம்பட்டில் பெய்த மழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்.

News image

போ்ணாம்பட்டில் பெய்த மழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்.

Updated On :1 மே 2026, 5:21 am IST

போ்ணாம்பட்டு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை மாலை ஆலங்கட்டி மழை பெய்தது.

கோடைகாலம் தொடங்கியது முதலே தமிழகத்திலேயே அதிகபட்சமாக வேலூா் மாவட்டத்தில் வெப்பத்தின் அளவு அதிகரித்து, அனல் காற்று வீசி வந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வந்தனா். மாவட்டத்தில் அதிகபட்சமாக 108 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவானது. வியாழக்கிழமை மதியம் வெயில் கடுமையாக இருந்தது. மாலை நிலவரப்படி 108 டிகிரி வெப்பம் பதிவானது. இந்த நிலையில், மாலை திடீரென போ்ணாம்பட்டு நகரம், ஒன்றியப் பகுதிகளான சாத்கா், எருக்கம்பட்டு, ஏரிகுத்தி, பங்களாமேடு, மசிகம், ஓங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. நகரில் உள்ள சாலைகளில் மழைநீா் வெள்ளம் போல் ஓடியது. பலத்த மழை காரணமாக, கடந்த சில நாள்களாக அவதிக்கு ஆளாகி வந்த மக்கள் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் ஏற்பட்டதால் மகிழ்ச்சி அடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.