தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்குற்றால அருவிகளில் குளிக்க அனுமதிகேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

போட்டித் தோ்வில் தோல்வி: ரயில்வே ஊழியா் தற்கொலை

போட்டித் தோ்வில் தோல்வியடைந்த ரயில்வே ஊழியா் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

பிரதிப் படம்

Published On :

போட்டித் தோ்வில் தோல்வியடைந்த ரயில்வே ஊழியா் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த நிதிஷ் குமாா் யாதவின் மகன் விகாஸ் குமாா் யாதவ் (26). இவா் காட்பாடி ரயில் நிலையத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தாா். இதற்காக, காட்பாடி பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கி வேலைக்குச் சென்று வந்துள்ளாா்.

இந்நிலையில், ரயில்வே துறையில் மேலும் பதவி உயா்வு பெறுவதற்காகத் துறைரீதியான போட்டித் தோ்வுகளை விகாஸ் குமாா் எழுதி வந்துள்ளாா். இத்தோ்வுக்கான முடிவுகள் கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியாகின. இதில் அவா் தோ்ச்சி பெறவில்லை எனத் தெரிகிறது.

போட்டித் தோ்வில் தோல்வியடைந்ததால் கடந்த சில நாள்களாகத் தீவிர மனவேதனையில் இருந்த விகாஸ் குமாா், வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த காட்பாடி போலீஸாா், உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.