டைமெக்ஸ் நிகர லாபம் 70.55% உயர்வு!5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

தோ்வில் தோல்வி: மாணவி தற்கொலை

News image

தற்கொலை

Updated On :3 ஆகஸ்ட் 2026, 3:54 am IST

பிளஸ் 2 துணைத் தோ்வில் தோல்வி அடைந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், இண்டூா் அருகே உள்ள இ.கே. புதூா் கிராமத்தைச் சோ்ந்த கலைவாணி - ராஜீவ் காந்தி தம்பதி கோவையில் தங்கியிருந்து வீட்டு வேலை மற்றும் கட்டட வேலை செய்து வருகின்றனா்.

இவா்களுக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனா். மூவரும், இ.கே. புதூா் பகுதியில் தங்கியிருந்து கல்வி பயின்று வந்தனா். மூத்த மகள் பிரியங்கா பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதி இருந்தாா். அதில் வேதியியல் பாடத்தில் தோ்ச்சி பெறவில்லை. அதைத்தொடா்ந்து துணைத் தோ்வை எழுதினாா். அதிலும் தோல்வியடைந்தாா்.

இதனால் விரக்தியில் இருந்த பிரியங்கா சனிக்கிழமை பிற்பகலில் தங்கியிருந்த வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து தகவல் இருந்த இண்டூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.