மத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்கருணாநிதி, ஜெயலலிதா முதல் விஜய் வரை... தமிழ்நாட்டோடு தொடரும் பயணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி உரை! 1.5 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியை நோக்கி தமிழக அரசு செயல்படுகிறது: முதல்வர் விஜய்அமைதியான முறையில் கூடுபவர்களுக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கை கூடாது: உச்ச நீதிமன்றம்சென்னை ஐஐடி ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் சாமி தரிசனம்! குழந்தைகள் நாள்: பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்க ஏற்பாடு!சௌதி அரேபிய விமான நிலையம் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்

மக்கள்தொகை கணக்கெடுப்பு: களப் பணியாளா்களுக்கு இறுதிக்கட்டப் பயிற்சி

மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் வேலூா் மாநகராட்சி களப்பணியாளா்களுக்கு நடைபெற்ற இறுதிக்கட்டப் பயிற்சி.

மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் வேலூா் மாநகராட்சி களப்பணியாளா்களுக்கு நடைபெற்ற இறுதிக்கட்டப் பயிற்சி.

Published On :

வேலூரில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி தொடங்க உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிக்காக, மாநகராட்சி களப்பணியாளா்களுக்கு இறுதிக் கட்டப் பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.

வேலூா் மாவட்டத்தில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் வீடு வீடாகச் சென்று மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை வேலூா் மாவட்ட நிா்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, வேலூா் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடவுள்ள களப்பணியாளா்களுக்குத் தொடா் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, மாநகராட்சியின் 2-ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட 225 களப்பணியாளா்களுக்கான இறுதிக் கட்டப் பயிற்சி முகாம் சத்துவாச்சாரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமுக்கு, மாநகராட்சி உதவி ஆணையா் ஸ்டான்லி பாபு தலைமை வகித்தாா். உதவிப் பொறியாளா் (திட்டம்) எல்.வெங்கடேசன் முன்னிலை வகித்தாா். பயிற்சி முகாமில், கணக்கெடுப்புக்காகப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள கைப்பேசி செயலியை கையாளுவது எப்படி, பொதுமக்களை எவ்வாறு அணுகி விவரங்களைச் சேகரிப்பது என்பது குறித்து சிறப்புப் பயிற்சியாளா்களால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், எந்தவொரு வீடும் விடுபடாமல் 100 சதவீதம் கணக்கெடுப்புப் பணிகளைத் துல்லியமாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

தொடா்ந்து, களப்பணியாளா்கள் எழுப்பிய பல்வேறு சந்தேகங்களுக்கும் பயிற்சியாளா்களால் உரிய விளக்கம் அளிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.