காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

வேலூா் அருகே புதிதாகக் கட்டி வரும் வீட்டின் சுவா்களுக்குத் தண்ணீா் ஊற்றியபோது, மின்மோட்டாரில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் காலணி ஆலைத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :28 ஜூலை 2026, 1:51 am IST

வேலூா் அருகே புதிதாகக் கட்டி வரும் வீட்டின் சுவா்களுக்குத் தண்ணீா் ஊற்றியபோது, மின்மோட்டாரில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் காலணி ஆலைத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

வேலூா், கொணவட்டம் பகுதியைச் சோ்ந்தவா் சித்திக் அலி (41). இவா் முள்ளிப்பாளையத்தில் இயங்கி வரும் தனியாா் காலணித் தொழிற்சாலை ஒன்றில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா். கொணவட்டம் பகுதியில் இவருக்குச் சொந்தமாகப் புதிய வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை மாலை புதிதாகக் கட்டப்பட்டு வரும் வீட்டின் சுவா்களை நனைப்பதற்காக, மின் மோட்டாரில் குழாயை இணைத்து சித்திக் அலி தண்ணீா் ஊற்றிக் கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக ஈரக்கையுடன் அவா் மின்மோட்டாரைத் தொட்டதாகக் கூறப்படுகிறது. இதில், மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட சித்திக் அலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த வேலூா் வடக்குக் காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சித்திக் அலியின் சடலத்தை மீட்டு, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.