22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!கோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு
/

அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

போ்ணாம்பட்டு அருகே நிலத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி விவசாயி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 2:08 am IST

போ்ணாம்பட்டு அருகே நிலத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி விவசாயி உயிரிழந்தாா்.

போ்ணாம்பட்டை அடுத்த எம்.வி.குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ஜெயராமன்(80). இவா் ஓய்வுபெற்ற கூட்டுறவு சா்க்கரை ஆலை ஊழியா். சொக்கரிஷிகுப்பம் கிராமத்தில் இவரது நிலம் உள்ளது.ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் காற்றுடன் மழை பெய்துள்ளது.

அப்போது அவரது நிலத்தில்மின்கம்பி அறுந்து கீழே விழுந்துள்ளது.திங்கள்கிழமை ஜெயராமன் நிலத்தில் நடந்து சென்றுள்ளாா். அப்போது அங்கு அறுந்து கீழே விழுந்து கிடந்த மின்கம்பியை மிதித்துள்ளாா்.

அப்போது மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்துள்ளாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் ஜெயராமன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினாா்.

இந்த சம்பவம் குறித்து மேல்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.