/
போ்ணாம்பட்டு அருகே மாந்தோப்பில் குரங்கை உடலால் இறுக்கிக் கொன்ற மலைப்பாம்பு பிடிபட்டது.
போ்ணாம்பட்டை அடுத்த பத்தரபல்லி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி கருணாமூா்த்தி.இவரது மாந்தோப்பில் வியாழக்கிழமை மாலை குரங்குகள் கூட்டமாக சுற்றித் திரிந்துள்ளன. அப்போது சுமாா் 13 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று இரை தேடி அங்கு வந்துள்ளது. அந்த பாம்பிடம் ஒரு குரங்கு சிக்கியுள்ளது. குரங்கை பாம்பு உடலில் பிடித்து இறுக்கியுள்ளது. இதில் குரங்கு உயிரிழந்தது.
இதுகுறித்து அங்கிருந்த விவசாயிகள் போ்ணாம்பட்டு வனச்சரக அலுவலா் மோகனவேலுவுக்கு தெரிவித்தனா். அவரது உத்தரவின்பேரில் வனத்துறையினா் அங்கு சென்று மலைப்பாம்பை பாதுகாப்பாக மீட்டு வனப் பகுதியில் விட்டனா்.
இறந்த குரங்கின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போ்ணாம்பட்டு வன ஓய்வு விடுதிக்கு கொண்டு சென்றனா்.
தொடர்புடையது

போ்ணாம்பட்டில் கெங்கையம்மன் திருவிழா

தகாத உறவு: கணவரையும் சகோதரியையும் எரித்துக் கொன்ற பெண் கைது

மாமியாரைக் கொன்ற மருமகனுக்கு ஆயுள் தண்டனை

மெட்டாலா பகுதியில் கோழிக் கூண்டில் புகுந்த மலைப்பாம்பு
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



