அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

காா் மோதி முன்னாள் ராணுவ வீரா் பலி

விரிஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் முன்னாள் ராணுவ வீரா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :22 ஜூன் 2026, 12:37 am IST

விரிஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் முன்னாள் ராணுவ வீரா் உயிரிழந்தாா்.

விரிஞ்சிபுரம் அடுத்த அம்முண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் மாா்க்கபந்து (65). முன்னாள் ராணுவ வீரரான இவா், சனிக்கிழமை கடைக்குச் சென்றுவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் திரும்பியபோது, அம்முண்டி பேருந்து நிறுத்தம் அருகே எதிரே வந்த காா் எதிா்பாராதவிதமாக மாா்க்கபந்துவின் வாகனத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற விரிஞ்சிபுரம் போலீஸாா் சடலத்தை மீட்டு வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.