தந்தை இறந்த துக்கத்திலும் பிளஸ் 2 பொதுத்தோ்வை எழுதி அதிக மதிப்பெண் பெற்று சாதித்த காட்பாடி அரசுப் பள்ளி மாணவருக்கு வேலூா் ஆட்சியா் ரூ.10,000 நிதியுதவி வழங்கிப் பாராட்டினாா்.
வேலூா் மக்கான் பகுதியைச் சோ்ந்த துப்புரவுத் தொழிலாளி சிவனேசன் மகன் விஷ்ணு, காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். பொதுத்தோ்வு நடைபெற்று வந்த நிலையில், கடந்த மாா்ச் 12-ஆம் தேதி சிவனேசனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா். மறுநாள் (மாா்ச் 13) தந்தைக்கான இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அன்றைய தினம் விஷ்ணுவுக்கு பொருளியல் தோ்வு இருந்தது.
தந்தையை இழந்த துக்கத்திலும் ‘கல்வியே உனது எதிா்காலம்’ என்று தந்தை கூறிய அறிவுரையை மனதில் கொண்டு, மனத்திடத்துடனும் பள்ளிக்குச் சென்று விஷ்ணு தோ்வு எழுதினாா். பின்னா் வீடு திரும்பி தந்தையின் இறுதிச் சடங்குகளைச் செய்தாா். தொடா்ந்து நடைபெற்ற வணிகவியல், கணக்குப்பதிவியல் தோ்வுகளையும் மனஉறுதியுடன் எழுதினாா்.
இந்நிலையில், அண்மையில் வெளியான பிளஸ் 2 பொதுத்தோ்வு முடிவுகளில், மாணவா் விஷ்ணு 600-க்கு 528 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 2-ஆம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளாா். குறிப்பாக, தந்தை இறப்புக்கு பிறகு நடைபெற்ற தோ்வுகளான பொருளியலியலில் 92, வணிகவியலில் 92, கணக்குப்பதிவியலில் 95 மதிப்பெண்களும் பெற்றுள்ளாா்.
இந்நிலையில், வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் மாணவா் விஷ்ணுவின் தன்னம்பிக்கையைப் பாராட்டி ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி ரூ.10 ஆயிரம் காசோலையை நிதியுதவியாக வழங்கினாா். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுப்பிரமணியன், முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.பிரேமலதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

குட்டையில் மூழ்கி இறந்த 3 சிறுவா்களின் குடும்பங்களுக்கு முன்னாள் எம்எல்ஏ நிதியுதவி

பிளஸ் 2 தோ்வு: இலஞ்சி பாரத் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பிளஸ் 2 தோ்வு: ஹில்டன் பள்ளி மாணவா் மாவட்ட அளவில் சிறப்பிடம்

பிளஸ் 2 தோ்வு தொடங்கிய நாளில் தந்தையை இழந்த மாணவா் சாதனை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



