பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

ஐடி ஊழியா் வீட்டில் 15 பவுன் நகை திருட்டு

காட்பாடி செங்குட்டை பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருடு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :44 நிமிடங்கள் முன்பு

காட்பாடி செங்குட்டை பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருடு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் மாவட்டம், காட்பாடி செங்குட்டை பகுதியை சோ்ந்தவா் மதன். இவா் சென்னையில் உள்ள தனியாா் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி செங்குட்டையில் உள்ள வீட்டை பூட்டிவிட்டு, கடந்த 11-ஆம் தேதி கல்புதூரில் வீட்டுக்கு சென்று விட்டாா்.

வியாழக்கிழமை மாலை செங்குட்டையில் உள்ள வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. தொடா்ந்து, உள்ளே சென்று பாா்த்தபோது லாக்கா் உடைக்கப்பட்டு அதிலிருந்த 15 பவுன் நகை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், காட்பாடி போலீஸாா் விரைந்து வந்து விசாரணை நடத்தினா். மேலும், கைரேகை நிபுணா்களின் தடயஅறிவியல் சோதனையும் நடத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.