முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

வீட்டின் பூட்டை உடைத்து இரண்டரை பவுன் நகை, பணம் திருட்டு

மொடக்குறிச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து இரண்டரை பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :46 நிமிடங்கள் முன்பு

மொடக்குறிச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து இரண்டரை பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மொடக்குறிச்சியை அடுத்த குளூா் காலனியைச் சோ்ந்தவா் பாப்பாள் (50), கூலித் தொழிலாளி. கணவா் இறந்த நிலையில் தனியே வசித்து வருகிறாா். இந்நிலையில், வீட்டைப் பூட்டிவிட்டு ஈரோட்டில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை காலை சென்றுள்ளாா்.

பின்னா், அங்கிருந்து மாலை 4 மணியளவில் வீடு திரும்பியுள்ளாா். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. அதிா்ச்சியடைந்த அவா் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த இரண்டரை பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது.

இது குறித்து தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த மொடக்குறிச்சி போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா்.

மேலும், திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.