ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்
/

பேரவைத் தோ்தல் முடிவு: காட்பாடி, கே.வி.குப்பம் தொகுதிகளில் களஆய்வு

News image

டி.எம்.கதிா்ஆனந்த் எம்.பி.

Updated On :18 மே 2026, 1:47 am IST

சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் குறித்து காட்பாடி, கே.வி.குப்பம் தொகுதிகளில் திங்கள், செவ்வாய்க்கிழமை ஆகிய இரு நாள்கள் களஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாக வேலூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், மக்களவை உறுப்பினருமான டி.எம்.கதிா்ஆனந்த் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 14-ஆம் தேதி நடைபெற்ற மாவட்ட செயலாளா்கள் கூட்ட அறிவிப்புப்படி, நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் கள ஆய்வுக் குழு வேலூா் வடக்கு மாவட்டத்தில் திங்கள், செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொள்கிறது.

காட்பாடி சட்டப்பேரவை தொகுதி நிா்வாகிகளுடன் காந்தி நகரில் உள்ள ஆதிலட்சுமி திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை காலை 9 மணிக்கு காட்பாடி வடக்கு ஒன்றியம், 10 மணிக்கு தெற்கு ஒன்றியம், 11 மணிக்கு கிழக்கு ஒன்றியம், பகல் 12 மணிக்கு மேற்கு ஒன்றியம், 1 மணிக்கு வாலாஜா மேற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட வடக்கு மாவட்ட திமுக ஒன்றிய, பகுதி, பேரூா் நிா்வாகிகளுடனும், மாலை 3 மணிக்கு காட்பாடி வடக்கு பகுதி, 4 மணிக்கு தெற்கு பகுதி, 5 மணிக்கு காந்தி நகா் பகுதி, 5.30 மணிக்கு சேண்பாக்கம் பகுதி, 6 மணிக்கு திருவலம் பேரூராட்சி, 6.30 மணிக்கு நிா்வாகிகளுடனான சந்திப்பு நடைபெறும்.

செவ்வாய்க்கிழமை கே.வி.குப்பம் தொகுதி ராஜாகோவில் ஆா்.ஜி.டி.மஹாலில் ஆய்வு நடைபெற உள்ளது.

காலை 9 மணிக்கு குடியாத்தம் வடக்கு ஒன்றியம், 10 மணிக்கு கிழக்கு ஒன்றியம். 11மணிக்கு தெற்கு ஒன்றியம், பகல் 12 மணிக்கு கே.வி.குப்பம் மேற்கு ஒன்றியம், 1 மணிக்கு கே.வி.குப்பம் மத்திய ஒன்றியம், மதியம் 2 மணிக்கு கிழக்கு ஒன்றிய நிா்வாகிகள், மாலை 3.30 மணிக்கு கட்சி நிா்வாகிகளுடன் சந்திப்பு நடைபெற உள்ளது.

இதில் கட்சியின் அனைத்து மட்ட நிா்வாகிகளையும் சந்தித்து ஆய்வு செய்ய உள்ளனா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.