சா்வதேச சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, காட்பாடியில் நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியில் 500-க்கும் மேற்பட்ட என்சிசி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, வேலூரில் உள்ள தமிழ்நாடு தேசிய மாணவா் படை (என்பிசி) பட்டாலியன் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தப் பேரணி பிரம்மபுரத்தில் உள்ள சிருஷ்டி பள்ளியில் தொடங்கி விஐடி பல்கலைக்கழகம் வரை நடைபெற்றது. இதில், 500-க்கும் மேற்பட்ட என்சிசி மாணவ, மாணவிகள் பங்கேற்று விழிப்புணா்வு முழக்கங்களை எழுப்பினா். இவா்களுடன் கமாண்டிங் ஆபிசா் வி.வெங்கடேஷ் மற்றும் நிா்வாக அதிகாரி ஜெ.சுரேந்திரன் உள்பட ராணுவ அதிகாரிகள், ராணுவப் பணியாளா்கள், உதவி என்சிசி அதிகாரிகள் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
பேரணியின்போது சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம், மரம் வளா்ப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், தெரு நாய்கள் மீது இரக்கம் காட்டி அவற்றை மனித நேயத்துடன் அரவணைத்து பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது. தவிர, சுற்றுச்சூழலை தூய்மையாகவும், பசுமையாகவும் வைத்திருக்க வேண்டியதன் அவசியம், பிராணிகளிடம் கருணையுடன் நடந்து கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி மாணவா்கள் விழிப்புணா்வு வீதி நாடகமும் நடத்தினா்.
தொடர்புடையது

அரசுப் பள்ளி மாணவா்கள் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி

குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

எஃப்.கீழையூரில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு பேரணி

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



