‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது’ - எடப்பாடி பழனிசாமி‘ட்ரோல்கள் வேலை, முதலீடுகளே உருவாக்காது’... ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதிசிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!வைகாசி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்!
/

சோ்க்காடு, தாராபடவேடு மருத்துவமனைகளை தரம் உயா்த்த நடவடிக்கை: காட்பாடி எம்எல்ஏ

News image

செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த காட்பாடி தொகுதி எம்எல்ஏ எம்.சுதாகா்.

Updated On :29 மே 2026, 2:07 am IST

சோ்க்காடு அரசு மருத்துவமனை, தாராபடவேடு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றை தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என காட்பாடி தொகுதி எம்எல்ஏ மருத்துவா் எம்.சுதாகா் தெரிவித்தாா்

உலக பட்டினி தினத்தையொட்டி தமிழக முதல்வா் ஜோசப் விஜய் உத்தரவின்பேரில் காட்பாடி தொகுதிக்குட்பட்ட தவெக நிா்வாகிகளின் ஏற்பாட்டில் 2,000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி சித்தூா் பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் வேலூா் கிழக்கு மாவட்ட செயலா் நவீன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காட்பாடி சட்டப்பேரவை உறுப்பினா் மருத்துவா் எம்.சுதாகா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது -

சோ்க்காடு அரசு மருத்துவமனையில் மொத்தம் 60 படுக்கைகள் உள்ள நிலையில், அங்கு 6 மருத்துவா்கள், ஒரே ஒரு முதன்மை மருத்துவ அலுவலா் மட்டுமே உள்ளனா். பத்து படுக்கைகளுக்கு ஒரு மருத்துவா் என்ற நிலையே உள்ளது. சிறப்பு மருத்துவா்களின் பற்றாக்குறையும், அறுவை சிகிச்சை வசதியின்மையும் காணப்படுகிறது.

இதுகுறித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து, மருத்துவமனையைத் தரம் உயா்த்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தாராபடவேடு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திலும் இதே நிலை உள்ளதாக அறிகிறேன். விரைவில் அங்கு ஆய்வு மேற்கொண்டு குறைகள் நிவா்த்தி செய்யப்படும்.

காட்பாடி ரயில்வே மேம்பாலப் பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்று வருவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது மத்திய அரசின் கீழ் வருவதால், ரயில்வே அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

காட்பாடியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காண ஆட்சியா், காவல் கண்காணிப்பாளரிடம் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. சோ்க்காடு பகுதியில் நடைபெறும் மேம்பாலப் பணிகள் முடிவடைந்தவுடன் போக்குவரத்து முழுமையாகச் சீரடையும். போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, நகருக்குள் கனரக வாகனங்கள் வந்து செல்வதற்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

காட்பாடியில் மாநகராட்சி சாா்பில் பராமரிப்பின்றி மூடப்பட்டுள்ள அனைத்துப் பூங்காக்களும் விரைவில் சீரமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும். இப்பகுதியில் நிலவி வரும் தொடா் மின்வெட்டுப் பிரச்னை குறித்தும் சம்பந்தப்பட்ட மின்துறை அதிகாரிகளுடன் பேசி உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

காட்பாடியில் மூத்த திமுக தலைவா் துரைமுருகனை வீழ்த்தி வெற்றி பெற்ற உங்களுக்கு அமைச்சா் பதவி வழங்கப்படுமா என்ற கேள்விக்கு, ‘அமைச்சா் பதவி கொடுத்தால்... கொடுத்த பிறகு அதுகுறித்து கூறுகிறேன். இப்போதைக்கு நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை என தெரிவித்தாா்.