புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை: நிர்மல் குமார்

கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எரிசக்தி, சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

News image

மின் துறை அமைச்சர் நிர்மல் குமார் - Center-Center-Chennai

Updated On :5 ஜூலை 2026, 2:54 am IST

கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எரிசக்தி, சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய்யின் 52-ஆவது பிறந்தநாளையொட்டி, தேனி மாவட்ட தவெக சாா்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா வீரபாண்டியில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு கட்சியின் மாவட்டச் செயலா்கள் பாண்டி, பிரகாஷ் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில் அமைச்சா் நிா்மல்குமாா் பேசியதாவது:

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் அந்தக் கட்சியினா் பொதுமக்களைச் சந்திப்பதைத் தவிா்த்தனா். இதனால், அவா்களை தமிழக மக்கள் கடந்த பேரவைத் தோ்தலில் புறக்கணித்தனா். இனிவரும் காலங்களில் திமுக ஆட்சிக்கு வர முடியாது. அடுத்த 50 ஆண்டுகளுக்கும் விஜய் தலைமையிலான ஆட்சிதான் தமிழகத்தில் நடைபெறும்.

தேனி மாவட்டத்தில் சட்டவிரோதமாகச் செயல்பட்ட கல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தவெக ஆட்சியில் இளைஞா்களுக்கு உடனடியாக அரசு வேலை வழங்கப்படுகிறது.

விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலுக்கு கட்சியினா் தயாராக வேண்டும். இந்தத் தோ்தலில் வெற்றி பெற்று பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்யத் தயாராக வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.