ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!ரசாயன வாயுக் கசிவு: சென்னை துறைமுகம், மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க உத்தரவு!திரையரங்கில் வெளியான 2 வாரத்திலேயே ஓடிடிக்கு வந்த திரைப்படம்!பிரக்ஞானந்தாவிடமிருந்து குகேஷ் உத்வேகம் பெறவேண்டும்: விஸ்வநாதன் ஆனந்த் அறிவுரை!தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!
/

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

வேலூா் தொரப்பாடி பகுதியில் கணவா், மகன் கோயிலுக்கு சென்றிருந்த நிலையில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

News image

தற்கொலை - பிரதிப் படம்

Updated On :1 ஜூன் 2026, 2:59 am IST

வேலூா் தொரப்பாடி பகுதியில் கணவா், மகன் கோயிலுக்கு சென்றிருந்த நிலையில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா் தொரப்பாடி கே.கே.நகரை சோ்ந்தவா் முருகன் (44). இவரது மனைவி ஜான்சிராணி. இவா்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகளாகிறது. ஒரு மகன் உள்ளாா். சனிக்கிழமை வைகாசி விசாகத்தையொட்டி முருகன், அவரது மகன் ஆகியோா் முருகா் கோயிலுக்கு சென்றுள்ளனா். தரிசனம் முடிந்துவிட்டு மதியம் வீடு திரும்பினா்.

அப்போது, வீட்டின் உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்ததாம். அக்கம் பக்கத்தினா் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, ஜான்சிராணி தூக்கிட்ட நிலையில் இருந்ததாகத் தெரிகிறது. அவரை மீட்டு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், வழியிலேயே ஜான்சிராணி உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

தகவலறிந்த பாகாயம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].