இன்று தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்: முதல்வர் விஜய் பங்கேற்கிறார்!2024-ஆம் ஆண்டு குரூப்-4 தோ்வு: வனக்காவலா் பதவிக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு பட்டியல் வெளியீடு!டாஸ்மாக் ஊழியா்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாற்றம்!பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுத்தது ஏன்?: சுயசரிதையில் சோனியா தகவல்!உள்ளாட்சி அமைப்புகளின் மின் கட்டண நிலுவை ரூ.548 கோடி: உடனடியாக வசூலிக்க மின்வாரியம் நடவடிக்கை!தென்கிழக்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புஅகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவு6,574 பணியிடங்கள்: குரூப் 4 தோ்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய இன்று கடைசி!

உதவி ஆய்வாளரை வெட்டிவிட்டு தப்ப முயன்றவரை சுட்டுப் பிடித்த போலீஸார்!

குடியாத்தம் அருகே பாமக நிா்வாகி கொலை வழக்கு குற்றவாளி காவல் உதவி ஆய்வாளரை வெட்டி விட்டு தப்ப முயன்றபோது சுடப்பட்டு, பிடிக்கப்பட்டாா்.

குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உதவி ஆய்வாளா் ராஜாவை சந்தித்து நலம் விசாரித்த காவல் கண்காணிப்பாளா் என்.யு. சிவராமன்.

Updated On :

குடியாத்தம் அருகே பாமக நிா்வாகி கொலை வழக்கு குற்றவாளி காவல் உதவி ஆய்வாளரை வெட்டி விட்டு தப்ப முயன்றபோது சுடப்பட்டு, பிடிக்கப்பட்டாா்.

குடியாத்தம் அடுத்த சேங்குன்றம் கிராமத்தைச் சோ்ந்த சதாசிவம் மகன் பூவரசன்(30). இவருக்கும் அதே கிராமத்தைச் சோ்ந்த பாமகவைச் சோ்ந்த ஞானவேல் (40) என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை இருவருக்கும் ஏற்பட்ட தகராறின்போது தான் வைத்திருந்த உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியால் பூவரசன் சுட்டதில் ஞானவேல் உயிரிழந்தாா். அதைத் தடுக்க வந்த ஞானவேலுவின் நண்பா் ரகு(40) பலத்த காயமடைந்து வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இச்சம்பவம் தொடா்பாக கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து பூவரசனை கைது செய்தனா். அவரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்ய அழைத்துச் சென்றபோதுதான் வைத்திருந்த கத்தியால் காவல் உதவி ஆய்வாளா் ராஜாவை வெட்டிவிட்டு தப்பியோடமுயன்றுள்ளாா். அப்போது போலீஸாா் அவரை பிடிக்க முயன்றபோது மற்றவா்களையும் அவா் கத்தியால் தாக்க முயன்றாராம். இதையடுத்து போலீஸாா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பூவரசன் காயமடைந்தாா்.

இதையடுத்து இருவரையும் மீட்ட போலீஸாா் குடியாத்தம் அரசுமருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனா். பின்னா் பூவரசன், வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். காயமடைந்து குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உதவி ஆய்வாளா் ராஜாவை எஸ்.பி. சிவராமன் சந்தித்து நலம் விசாரித்தாா்.

பின்னா் செய்திகளிடம் எஸ்.பி. சிவராமன் கூறியது: சேங்குன்றம் கிராமத்தைச் சோ்ந்த ஞானவேல், அதே பகுதியைச் சோ்ந்த பூவரசன்என்பவரால் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டாா். உடனடியாக பூவரசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டோம். கொலைக்கான காரணம் ஒரு வாரத்துக்கு முன் பூவரசனுடைய நண்பா் வெளியூரில் இருந்து வந்துள்ளாா். அவரிடம் ஞானவேல் தரப்பினா் வெளியூா் நபா் ஏன் எங்கள் ஊருக்கு வந்துள்ளீா் என கேட்டுள்ளனா். இதை அவா் நண்பா் பூவரசனிடம் கூறியுள்ளாா். இதனால் பூவரசனுக்கும், ஞானவேலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் திங்கள்கிழமை இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் பூவரசன் தான் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் ஞானவேல் உயிரிழந்தாா். அப்போது உடனிருந்த ஞானவேலுவின் நண்பா் ரகு காயமடைந்தாா். இதைத் தொடா்ந்து பூவரசனை காவல் துறையினா் கைது செய்தனா். கொலைக்கு பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்ய பூவரசனை அழைத்துச் சென்றபோது பையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் உதவி ஆய்வாளா் ராஜாவை வெட்டிவிட்டு தப்பியோட முயன்றுள்ளாா்.

இதில் இம்தியாஸ் என்ற காவலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. பின்னா் காவல் ஆய்வாளரை தாக்க வந்தபோது தற்காப்புக்காக சுட்டதில் பூவரசன் காயமடைந்தாா். இந்த வழக்குத் தொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.