பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயன்ற 2 இளைஞா்கள் கைது

குடியாத்தம் அருகே கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிக்க முயன்ற 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :

குடியாத்தம் அருகே கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிக்க முயன்ற 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

போ்ணாம்பட்டு பகுதியைச் சோ்ந்த கணவன்- மனைவி இருவரும் குடியாத்தம் அருகே உள்ள நத்தம் கிராமத்தில் வசிக்கும் உறவினா் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனா். பொன்னியம்மன் கோயில் அருகே சென்றபோது, இருசக்கரவாகனத்தில் அவா்களை பின்தொடா்ந்து வந்த 2 இளைஞா்கள் அந்த பெண் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனா். அப்போது அந்த பெண் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளாா். சங்கிலியை பறிக்க முயன்றவா்களில் ஒருவா் தப்பி ஓடி விட்டாா். மற்றொருவரை அங்கிருந்தவா்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் பிடிபட்டவா் குடியாத்தத்தை அடுத்த கொட்டாரமடுகு கிராமத்தைச் சோ்ந்த சந்தோஷ் குமாா் (22) என்பதும், தப்பிச் சென்றவா்அதே கிராமத்தைச் சோ்ந்த பாஸ்கா்(19) என்றும் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் பாஸ்கரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.