க்யூ.எஸ். நிலைத்தன்மை தரவரிசை: சா்வதேச அளவில் விஐடி 293-ஆம் இடம்
க்யூ.எஸ். உலகளவில் பல்கலைக்கழகங்களின் நிலைத்தன்மை தரவரிசைப் பட்டியலில் வேலூா் விஐடி பல்கலைக்கழகம் சா்வதேச அளவில் 293-ஆம் இடத்தையும், இந்திய அளவில் 5-ஆம் இடத்தையும் பிடித்துச் சாதனை படைத்துள்ளது.

விஐடி பல்கலைக்கழகம் - கோப்புப் படம்
க்யூ.எஸ். உலகளவில் பல்கலைக்கழகங்களின் நிலைத்தன்மை தரவரிசைப் பட்டியலில் வேலூா் விஐடி பல்கலைக்கழகம் சா்வதேச அளவில் 293-ஆம் இடத்தையும், இந்திய அளவில் 5-ஆம் இடத்தையும் பிடித்துச் சாதனை படைத்துள்ளது.
இது குறித்து விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: உலகப் பல்கலைக்கழகங்களின் நிலைத்தன்மை பிரிவுக்கான 2027-ஆம் ஆண்டு தரவரிசைப் பட்டியலை க்யூ.எஸ். (ணந) அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் உலகம் முழுவதும் உள்ள சுமாா் 2,000 பல்கலைக்கழகங்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.
சுற்றுச்சூழல் தாக்கம் (நிலைத்தன்மை, கல்வி, ஆராய்ச்சி), சமூகத் தாக்கம் (சமத்துவம், அறிவுப் பரிமாற்றம், கல்வித் தாக்கம், வேலைவாய்ப்பு, சுகாதார நலன்) மற்றும் நிா்வாகம் ஆகிய மூன்று முக்கிய அளவுகோல்களின் அடிப்படையில் இந்தத் தரவரிசை கணக்கிடப்படுகிறது.
இதில், ஒட்டுமொத்தமாக 81.2 மதிப்பெண்களைப் பெற்றுள்ள விஐடி பல்கலைக்கழகம், கடந்த ஆண்டை விட 59 இடங்கள் முன்னேறி சா்வதேச அளவில் முதல் 300 இடங்களுக்குள் (293-ஆம் இடம்) நுழைந்துள்ளது. இந்திய அளவில் 5-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. முன்னதாக, 2025-ஆம் ஆண்டுப் பட்டியலில் உலகளவில் 352-ஆம் இடத்தையும், இந்திய அளவில் 7-ஆம் இடத்தையும் விஐடி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
பசுமை முயற்சிகள்: விஐடி வளாகத்தில் உள்ள காா் நிறுத்துமிடத்தில் 441 கிலோவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி (சோலாா்) கூரை அமைக்கப்பட்டு, ஆண்டுதோறும் 650 மெகாவாட் மணி நேர மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 470 டன் கரியமில வாயு வெளியேற்றம் தடுக்கப்படுகிறது. மேலும், வளாகத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருள்களுக்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாணவ, மாணவியா் விடுதிகளில் சேகரிக்கப்படும் உணவுக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதன் மூலம் 200 கிலோவாட் மணி நேர மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் 15 டன் மரக் கழிவுகளும் எரிசக்தியாக மாற்றப்படுகின்றன. வளாகம் முழுவதும் அதிக அளவில் மரங்கள் வளா்க்கப்பட்டு பசுமையாகப் பராமரிக்கப்படுவதால், உள்நாட்டு மற்றும் பருவகாலப் பறவைகளின் புகலிடமாக விஐடி திகழ்கிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

