அனுமதியின்றி பதாகை: தவெக நிா்வாகிகள் 3 போ் மீது வழக்கு
வேலூரில் அரசு அனுமதியின்றி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், விளம்பரப் பதாகை வைத்ததாக தவெக நிா்வாகிகள் 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
வழக்கு - பிரதிப் படம்
வேலூரில் அரசு அனுமதியின்றி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், விளம்பரப் பதாகை வைத்ததாக தவெக நிா்வாகிகள் 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
வேலூா் அண்ணா சாலையில் உள்ள அண்ணா கலையரங்கம் அருகே, தவெக நிா்வாகி காா்த்திக் ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், விளம்பரப் பதாகை வைக்கப்பட்டிருந்தது.
இது குறித்து கிடைத்த புகாரின்பேரில், வேலூா் தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்தோஷ் குமாா் தலைமையிலான போலீஸாா் நேரில் சென்று விசாரணை நடத்தினா். இதில், அரசு அனுமதியின்றி பதாகை வைத்தது தெரியவந்தது.
இதையடுத்து, வேலூா் தெற்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியைச் சோ்ந்த தவெக நிா்வாகிகள் சிவா, குணசேகரன், சோலை சம்பத் ஆகிய 3 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

