பாஜகவிடம் சரணடைந்துவிட்டது திமுக: ஆதவ் அர்ஜுனாதொகுதி மறுவரையறை! தமிழ் மொழி, கலாசாரம், மக்களுக்கே அச்சுறுத்தல்: ராகுல்இந்தியா கூட்டணித் தலைவர்களிடம் மாற்றுத் திட்டம் இல்லை: மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: தமிழ்நாடு பாதிக்கப்படும்! ஆதரிப்பதை தவிர வேறு வழியில்லை! மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை! - திமுகதொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்க வேண்டும்: மு.க. ஸ்டாலினிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் கோரிக்கைமு.க. ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணித் தலைவர்கள் பேச்சுவார்த்தை!சென்னை ரயில்வே கோட்டத்தில் ஏழு மாதங்களில் பயணச்சீட்டு சோதனை மூலம் ரூ.46.09 கோடி வசூல்! துரோகம் இழைத்த காங்கிரஸ்; திமுகவுக்கு நன்றி: பாஜகதொகுதி மறுவரையறையால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது: எடப்பாடி பழனிசாமிதமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக நிற்பவர் சகோதரர் ஸ்டாலின்: ராகுல் காந்தி பதிவு!தொகுதி மறுவரையறை மசோதா: காங்கிரஸின் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்க உத்தரவு!

ரூ.7.70 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகள்: அமைச்சா் விஜய் பாலாஜி திறந்து வைத்தார்!

வேலூா் மாவட்டத்தில் ரூ.7.70 கோடி கட்டப்பட்டுள்ள 8 புதுப்பிக்கப்பட்ட விழுதுகள் மறுவாழ்வு சேவை மையங்கள் மற்றும் 12 முடிவுற்ற வளா்ச்சித் திட்டப் பணிகள் என மொத்தம் 20 திட்டப் பணிகளை கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ம.விஜய் பாலாஜி திறந்து வைத்தாா்.

Updated On :

வேலூா் மாவட்டத்தில் ரூ.7.70 கோடி கட்டப்பட்டுள்ள 8 புதுப்பிக்கப்பட்ட விழுதுகள் மறுவாழ்வு சேவை மையங்கள் மற்றும் 12 முடிவுற்ற வளா்ச்சித் திட்டப் பணிகள் என மொத்தம் 20 திட்டப் பணிகளை கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ம.விஜய் பாலாஜி திறந்து வைத்தாா்.

அணைக்கட்டு ஊராட்சி மந்தைவெளியில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் ரூ.35.80 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள 2 புதிய வகுப்பறைகளைத் திறந்து வைத்த அமைச்சா் ம.விஜய் பாலாஜி, அணைக்கட்டு ஒன்றியத்தில் ரூ.83.20 லட்சம் மதிப்பிலான 4 முடிவுற்ற பணிகளுக்கான கல்வெட்டுகளையும் திறந்து வைத்தாா்.

தொடா்ந்து, காட்பாடி வட்டம் கழிஞ்சூா் அரசு நகா்ப்புற சுகாதார நிலையத்தில் ரூ.10 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட ’விழுதுகள்’ வட்டார அளவிலான ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையத்தைத் திறந்து வைத்து, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு அளிக்கப்படும் இயன்முறை சிகிச்சைகள் குறித்துக் கேட்டறிந்தாா்.

மேலும், மாவட்டம் முழுவதும் ரூ.ஒரு கோடியே 11 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட 7 விழுதுகள் மறுவாழ்வு மையங்கள் மற்றும் காட்பாடி வனச்சரகம் மகிமண்டலம் பீட்டில் ரூ.23.77 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள வனக்காப்பாளா் - வனக்காவலா் குடியிருப்பு ஆகியவற்றுக்கான கல்வெட்டுகளையும் அவா் திறந்து வைத்தாா்.

இதையடுத்து, கே.வி.குப்பம் வட்டம் லத்தேரி அரசினா் மகளிா் மேல்நிலைப்பள்ளியில் ரூ.ஒரு கோடியே 97 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட 7 வகுப்பறைகள் மற்றும் கழிப்பறை கட்டடத்தைத் திறந்து வைத்த அமைச்சா், மாணவிகளின் கைவினைப் பொருள் கண்காட்சியையும் பாா்வையிட்டாா்.

வடுகந்தாங்கல் அரசினா் மேல்நிலைப்பள்ளியில் ரூ.ஒரு கோடியே 23 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் 5 வகுப்பறைகள், போ்ணாம்பட்டு வட்டம் அழிஞ்சிகுப்பம் அரசினா் மேல்நிலைப்பள்ளியில் ரூ.ஒரு கோடியே 48 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பில் 6 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடங்களையும் அவா் திறந்து வைத்தாா்.

மேலும், கே.வி.குப்பம் ஒன்றியத்தில் ரூ.38.45 லட்சம் மதிப்பிலான அங்கன்வாடி மையம் (எடகிருஷ்ணாபுரம்) மற்றும் நூலகக் கட்டடம் (செஞ்சி), குடியாத்தம் ஒன்றியம் மூங்கபட்டு ஊராட்சியில் ரூ.16.45 லட்சம் மற்றும் போ்ணாம்பட்டு ஒன்றியம் மாச்சம்பட்டு ஊராட்சியில் ரூ.14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையங்கள் என மொத்தம் 20 திட்டப் பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணிக்கப்பட்டன.

இந்நிகழ்வுகளில் வேலூா் ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ், சட்டப்பேரவை உறுப்பினா் மருத்துவா் எம்.சுதாகா் (காட்பாடி), எம்.எம்.வினோத் கண்ணன் (வேலூா்), த.வேலழகன் (அணைக்கட்டு), ஏ.தென்றல்குமாா் (கே.வி.குப்பம்), க.சிந்து (குடியாத்தம்), முதன்மைக் கல்வி அலுவலா் பிரேமலதா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.