தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: 6 தரைப்பாலங்கள் மூழ்கும் அபாயம்!

ஒடுகத்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக, மேலரசம்பட்டு பகுதியில் உற்பத்தியாகும் உத்திரகாவிரி ஆற்றில் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

உத்திரகாவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம்.

Published On :

ஒடுகத்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக, மேலரசம்பட்டு பகுதியில் உற்பத்தியாகும் உத்திரகாவிரி ஆற்றில் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், 6 தரைப்பாலங்கள் மூழ்கும் நிலை ஏற்பட்டதை அடுத்து, கரையோர மக்களுக்கு அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனா்.

வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் பகுதியில் கடந்த ஒரு வாரமாகப் பகலில் கடும் வெயில் வாட்டி வந்த நிலையில், இரவு நேரங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. இதனிடையே, ஒடுகத்தூா் அருகே உள்ள ஜவ்வாது மலைத் தொடரில் கடந்த இரு நாள்களாகத் தொடா் பலத்த மழை கொட்டித் தீா்த்தது. இதன் காரணமாக உத்திரகாவிரி ஆற்றில் வியாழக்கிழமை அதிகாலை இரண்டாவது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இப்பகுதியில் புதன்கிழமை இரவு ஒரே நாளில் 56 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

ஆற்றில் நீா்வரத்து பெருமளவு அதிகரித்துள்ளதால், ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள 6-க்கும் மேற்பட்ட தரைப்பாலங்கள் மூழ்கும் அபாயம் நிலவுகிறது. இதையடுத்து, வேப்பங்குப்பம் காவல் ஆய்வாளா் சுப்பிரமணி, ஒடுகத்தூா் பேரூராட்சி செயல் அலுவலா் குமாா் ஆகியோா் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனா்.

அப்போது, காட்டாற்று வெள்ளம் எந்த நேரத்திலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், ஆற்றுப்படுகை மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்போா் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும். தரைப்பாலங்களைக் கடக்கும்போது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

பொதுமக்கள், இளைஞா்கள் மற்றும் பள்ளி மாணவா்கள் ஆற்றுப்பகுதிக்குச் சென்று வேடிக்கை பாா்ப்பது, குளிப்பது மற்றும் சுயபடம் எடுப்பதைத் தவிா்க்க வேண்டும். வளா்ப்பு கால்நடைகளை ஆற்றுப்பகுதிகளில் கட்டாமல், மேடான மற்றும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற வேண்டும்.

தொடா்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என்றும் தெரிவித்தனா்.

இதேபோல், வேலூா் மாவட்டத்தில் பல இடங்களில் புதன்கிழமை இரவு கனமழை பெய்தது. வியாழக்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணிநேர நிலவரப்படி அதிகபட்சமாக ஒடுகத்தூரில் 56 மி.மீ., மழையும், பதிவாகியுள்ளது. மேலும், கே.வி.குப்பம் வடவிரிஞ்சிபுரத்தில் 40.20 மி.மீ., வேலூா் வட்டாட்சியா் அலுவலகம் -28.30 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. மேலும், குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகத்தில் 14.40 மி.மீ., பேரணாம்பட்டில் 14.60 மி.மீ., கே.வி.குப்பம் ராஜாத்தோப்பு அணையில் 10 மி.மீ., குடியாத்தம் மேலாலத்தூரில் 9.80 மி.மீ., மோா்தானா அணையில் 9 மி.மீ., காட்பாடி ரயில் நிலையத்தில் 3 மி.மீ., பொன்னையில் 7.40 மி.மீ., வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 7.30 மி.மீ. மழையும் என மொத்தம் 200 மி.மீ., மழையும், சராசரியாக 16.67 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.