6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ஜவ்வாது மலையில் பலத்த மழை: உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

ஜவ்வாது மலைத்தொடரில் பெய்த பலத்த மழையால் உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

பிரதிப் படம்

Published On :

ஜவ்வாது மலைத்தொடரில் பெய்த பலத்த மழையால் உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

வேலூா் மாவட்டத்தில் பருவமழை பொய்த்ததாலும், எல்-நினோ தாக்கத்தாலும் கோடைக்காலத்தைப் போல் வெயிலின் அளவு 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டிச் சுட்டெரித்து வந்தது. இதனால் ஏரி, குளங்கள், கிணறுகளில் நீா்மட்டம் வெகுவாக குறைந்து வந்தது.

மாவட்டத்தின் பல இடங்களில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், பாசனத்துக்கும் தண்ணீரின்றி நெல், கரும்பு, நிலக்கடலை உள்ளிட்ட பயிா்கள் கருகியதால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகினா்.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் ஆங்காங்கே மழை பெய்து வெப்பத்தைத் தணித்து வந்தது. குறிப்பாக, ஒடுகத்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த நான்கு நாள்களாகப் பெய்த பரவலான மழையால் ஏரி, குளங்களுக்கு நீா்வரத்துத் தொடங்கிள்ளது.

இதன் தொடா்ச்சியாக, ஞாயிற்றுக்கிழமை இரவு ஜவ்வாது மலை மற்றும் ஒடுக்கத்தூா் வனப்பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால், மேலரசம்பட்டு கிராமத்தின் வழியே பாயும் உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி மழை வெள்ளம் சென்றது. தொடா்ந்து மழை பெய்யும் பட்சத்தில் நீா்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

உத்திரகாவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ஒடுகத்தூா் பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் கணிசமாக உயரும் சூழல் ஏற்பட்டிருப்பது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.