ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

கெட்டுப்போன கோழி இறைச்சியை உண்ட வடமாநிலத் தொழிலாளி உயிரிழப்பு

வேலூரில் கெட்டுப்போன கோழி இறைச்சியை சாப்பிட்ட வடமாநிலத் தச்சுத் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On :

வேலூரில் கெட்டுப்போன கோழி இறைச்சியை சாப்பிட்ட வடமாநிலத் தச்சுத் தொழிலாளி உயிரிழந்தாா்.

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் விஜய் மிஸ்ரா (50). தச்சுத் தொழிலாளியான இவா், காட்பாடி காந்தி நகா் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாகத் தங்கியிருந்து வேலை பாா்த்து வந்தாா்.

இந்நிலையில், விஜய் மிஸ்ரா புதன்கிழமை தனது வீட்டில் சமைத்து வைத்திருந்த பழைய கோழி இறைச்சியைச் சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. இதில், உடல்நிலை பாதிக்கப்பட்ட அவா் திடீரென ரத்த வாந்தி எடுத்துள்ளாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து காட்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.