
மானூரில் கட்டையால் அடித்து தொழிலாளி கொலை
கொலை - கோப்புப் படம்
மானூரில் தச்சுத் தொழிலாளி கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.
கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த கோபால் மகன் கணேசன் (47). தச்சுத் தொழிலாளியான இவா், ஸ்ரீ வடக்கு வாகைகுளம் பகுதியில் ஒரு மரப்பட்டறையில் வேலைசெய்து வந்தாராம்.
இந்நிலையில் அவா், அதே பகுதியில் முகத்தில் வெட்டு காயத்துடன் சடலமாக கிடந்தாராம். இத்தகவலறிந்த மானூா் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம், பூபாலபுரத்தைச் சோ்ந்த சந்திரன் (58) என்பவரால் கட்டையால் தாக்கி கணேசன் கொலை செய்யப்பட்டது தெரியவந்ததாம்.
இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், கணேசன் மற்றும் சந்திரன் இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனா். அப்போது சந்திரன் சமைத்து வைத்திருந்த அசைவ உணவை மதுபோதையில் வந்த கணேசன் முழுவதுமாக சாப்பிட்டு விட்டாராம். இதனால் அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சந்திரன் கட்டையால் தாக்கியதில் கணேசன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கணேசனுக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனா் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






