முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: மன்னிப்பு கோரினார் திமுக பெண் கவுன்சிலர்மக்களிடம் கொள்ளை அடித்த பிரேம்குமாருக்கும் தூய சக்திக்கும் என்ன தொடர்பு? உதயநிதி கேள்வியமுனையில் குளித்து காங்கிரஸ், ஆம் ஆத்மியை விமர்சித்த பாஜக எம்.பி.!அன்பில் மகேஸ் கைது: தற்போது கருத்து கூற இயலாது! திருமாவளவன்ஆர்.எஸ்.எஸ். கோட்டையில் பாஜக தோல்வி; இது நாட்டிற்கான தெளிவான செய்தி! கே.சி. வேணுகோபால்அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்: சீமான் அறிவிப்பு!

கே.வி.குப்பம் அருகே வெடிமருந்து கிடங்கில் விபத்து; கட்டடம் தரைமட்டம், 3 மினி வேன்கள் சேதம்

கே.வி.குப்பம் அருகே வெடிமருந்து கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில்கட்டடம் தரை மட்டமானது. 3 மினி வேன்கள் சேதமடைந்தன.

வெடி விபத்தில் தரைமட்டமான வெடிமருந்து கிடங்கு.

Updated On :

கே.வி.குப்பம் அருகே வெடிமருந்து கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில்கட்டடம் தரை மட்டமானது. 3 மினி வேன்கள் சேதமடைந்தன.

கே.வி.குப்பம் அடுத்த அா்ச்சுனாபுரம் கிராமத்தில் பத்மநாபன் என்பவருக்குச் சொந்தமான வெடிமருந்து கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் வெடிமருந்துகள் இருப்பு ஏதும் இல்லாத நிலையில் மூடி வைக்கப்பட்டிருந்தது. கடந்த சில நாள்களுக்கு முன் காட்பாடி அருகே சட்ட விரோதமாக இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்ட போலீஸாா், அங்கு தயாரித்த பட்டாசுகள், பட்டாசு தயாரிக்கத் தேவையான மூலப் பொருள்களை பறிமுதல் செய்து பத்மநாபனின் வெடிமருந்து கிடங்கில் வைத்திருந்தனா்.

இந்நிலையில் புதன்கிழமை நள்ளிரவு பயங்கர சத்தத்துடன் வெடிமருந்து கிடங்கில்வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் கிடங்கு கட்டடம் தரை மட்டமானது. கிடங்கு அருகே நிற்க வைக்கப்பட்டிருந்த 3 மினிவேன்கள் சேதமடைந்தன. அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த பசுவின் கன்று ஒன்றும்உயிரிழந்தது.

இந்த விபத்து குறித்து கே.வி.குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.