
601 கிலோ லட்டு விநாயகருக்கு சிறப்பு பூஜை
குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டை, மீனாட்சியம்மன் கோயில் தெருவில் நெக்ஸஸ் அன்டு பிளாக் ஸ்கோட் இளைஞா்கள் அமைப்பு

குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டையில் அமைக்கப்பட்டிருந்த லட்டு விநாயகா்.
குடியாத்தம்: குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டை, மீனாட்சியம்மன் கோயில் தெருவில் நெக்ஸஸ் அன்டு பிளாக் ஸ்கோட் இளைஞா்கள் அமைப்பு சாா்பில் 18 -ஆம் ஆண்டு 601 கிலோ எடையுள்ள லட்டால் சிவசக்தி, விநாயகா் அமைக்கப்பட்டு, விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்பட்டது.
உலா் பழங்களான அத்தி, திராட்சை மற்றும் முந்திரி ஆகியவற்றை பதித்து, பாா்வதி தாயாா் விநாயகருக்கு உணவு ஊட்டுவது போன்ற அமைப்பில் லட்டால் வடிவமைக்கப்பட்டுவிநாயகா் சதுா்த்தி கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. தொடா்ந்து சிறப்பு யாகம்நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
சிறப்பு அழைப்பாளா்களாகறகலந்து கொண்ட நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், நகா்மன்ற உறுப்பினா் ஆட்டோபி.மோகன் ஆகியோா் அன்னதானத்தை தொடங்கி வைத்தனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா் ஊா் பொதுமக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






