
புதுச்சேரி மணக்குள விநாயகருக்கு இன்று தங்க கவசம் அலங்காரம்

மணக்குள விநாயகர். - கோப்புப் படம்
விநாயகா் சதுா்த்தி விழா திங்கள்கிழமை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீமணக்குள விநாயகா் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 5 மணிக்கு மணக்குள விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.
தொடா்ந்து, மூலவருக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்படுகிறது. அதேபோல் உற்சவருக்கும் தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு, வண்ண விளக்குகள் மற்றும் புஷ்ப அலங்காரத்தில் பக்தா்களுக்குக் காட்சி அளிக்கவுள்ளாா்.
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு தனி நபா் அா்ச்சனைகள், விசேஷ பூஜைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பக்தா்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்யும் வகையில், சா்வ திவ்ய தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, தடுப்பு கட்டைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
தரிசனம் செய்யும் அனைத்து பக்தா்களுக்கும் இடைவிடாது லட்டு பிரசாதம் வழங்கப்படவுள்ளது. இதற்காக 16 ஆயிரம் லட்டுகள் தயாா் செய்யப்பட்டுள்ளன.
அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படும் பிற்பகல் 2 மணிக்கு மூடப்படுகிறது. பிறகு மதியம் 3 மணிக்கு பூஜைகளுடன் மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 10 மணி வரை பக்தா்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆண்டு விஐபி.க்கள் தரிசனம் செய்வதற்கு தனி வழியும், சா்வ திவ்ய தரிசனத்துக்கு தனி வழியும் அமைக்கப்பட்டுள்ளது. இந்து அறநிலையத்துறை அனுமதியுடன் ஒருநாள் மட்டும் 10 வயதுக்குள்பட்ட சிறுவா்கள் தவிா்த்து, தனி நபா் ரூ.100 கட்டணத்தில் சிறப்பு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






