காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சுமேட்டூரிலிருந்து காவிரி நீர் கல்லணை வந்தது! நாளை காலை திறப்பு!நேபாள பெருவெள்ளம்! தஞ்சையில் மரபணு சேகரிப்பு பணி தொடக்கம்!!தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

நெல்லை உச்சிஷ்ட கணபதி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றம்!

யோகநிலையில் அருள்பாலிக்கும் உச்சிஷ்ட கணபதிக்கு விநாயகர் சதுர்த்தி விழா...

Flag-hoisting ceremony for the Vinayagar Chaturthi

விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றம் - video crop

Published On :5 செப்டம்பர் 2026, 12:15 pm IST

நெல்லை உச்சிஷ்ட கணபதி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றங்கரையில், மணிமூர்த்தீஸ்வரம் என்னும் திருத்தலத்தில் ஸ்ரீ மூர்த்தி விநாயகா் என்ற ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி திருக்கோயில் அமைந்துள்ளது. ராஜ கோபுரத்துடன் விநாயகருக்கான தனி கோயிலாகும். இங்கு உச்சிஷ்ட கணபதி நான்கு கரங்களுடன் யோகநிலையில் இடது மடியில் அம்பாளுடன் அருள்பாலிக்கிறார். இத்திருக்கோயிலில் சித்திரை மாதத்தின் முதல் மூன்று நாள்களுக்கு அதிகாலையில் சூரிய ஒளி விநாயகர் மீது பரவும் வகையில் கட்டடக்கலை அமைந்துள்ளது.

சிறப்புகள் வாய்ந்த இத்திருக்கோயிலில் ஆவணி மாதம் வரும் விநாயகா் சதுா்த்தி விழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதற்காக நேற்று மாலை அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி அங்குரார்ப்பணம் ரக்ஷாபந்தனம் போன்றவைகள் நடைபெற்றன.

திருவிழாவின் முதல்நாளான இன்று அதிகாலை திருக்கோயில் நடைதிறக்கப்பட்டு காலை யாகசாலையில் கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து கொடிப்பட்டம் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு, கொடிப்பட்டத்திற்குப் பூஜைகள் நடைபெற்று காலை 8.00 -9.00 க்குள் கன்யாலக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

பின்னர், கொடிக்கம்பத்திற்கு அபிஷேகம் நடைபெற்று, கொடிமரம் அலங்கரிக்கப்பட்டுச் சிறப்புத் தீபாராதனை நடைபெற்றது. 10 நாள்கள் நடைபெறும் விநாயகா் சதுா்த்தி விழாவில் காலையில் யாகசாலை பூஜைகள் சுவாமிக்கு அபிஷேகமும் நடைபெறுகின்றது. மாலையில் விநாயகா் மூஷிக வாகனத்தில் உலா வரும் நிகழ்வு நடைபெறுகின்றது.

விழாவில் வரும் 12ம் தேதி 8ம் திருநாளில் மாலையில் பச்சை சாத்தி திருவீதி உலாவும் நடைபெறும். வருகின்ற 14ம் தேதி ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெறுகிறது. நன்பகலில் தாமிரபரணி நதிக்கரையில் தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவடைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.