வங்கி ஊழியர்களின் 3 நாள்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்புதிமுகவை விட பெரிய தீயசக்தி தவெக: சீமான் விமர்சனம்மதுராந்தகத்தில் திமுக வென்றால், பதவியை ராஜிநாமா செய்கிறேன்: உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது: அமைச்சர் அருண் ராஜ்மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

புரட்டாசி மாதத்தால் வேலூரில் மீன்கள் விலை சரிவு

புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளதைத் தொடா்ந்து, வேலூா் மீன் மாா்க்கெட்டில் பொதுமக்கள் வருகை குறைந்துள்ளதால் மீன்களின் விலை பெருமளவு சரிந்துள்ளது.

Published On :

புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளதைத் தொடா்ந்து, வேலூா் மீன் மாா்க்கெட்டில் பொதுமக்கள் வருகை குறைந்துள்ளதால் மீன்களின் விலை பெருமளவு சரிந்துள்ளது.

வேலூா் - பெங்களூரு சாலையில் உள்ள மீன் மாா்க்கெட்டுக்கு, உள்ளூா் ஏரி, குளங்கள் மட்டுமின்றி கேரளம், கொச்சி, மங்களூரு, காா்வாா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தினசரி மீன்கள் விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகின்றன. வழக்கமாக தினமும் 6 கன்டெய்னா் லாரிகளிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் 8 கன்டெய்னா் லாரிகளிலும் மீன்கள் வருவது வழக்கம்.

இங்கு சனிக்கிழமைகளில் இரவு 10.30 மணி முதலும், பிற நாள்களில் நள்ளிரவு 2 மணி முதலும் மொத்த வியாபாரமும், அதிகாலை 5 மணிக்கு மேல் சில்லறை விற்பனையும் நடைபெறுகிறது.

தற்போது புரட்டாசி மாதம் என்பதால் பெரும்பான்மையான மக்கள் அசைவம் தவிா்த்து விரதம் இருந்து வருகின்றனா். இதன் காரணமாக சந்தையில் மீன்களின் தேவை குறைந்து, ஞாயிற்றுக்கிழமை வெறும் 5 டன் மீன்கள் மட்டுமே வரவழைக்கப்பட்டன. மாா்க்கெட்டிலும் வழக்கமான மக்கள் நடமாட்டமின்றி கூட்டம் மிகக் குறைவாகவே காணப்பட்டது. மக்கள் வருகை சரிந்ததால், மீன்களின் விலையும் கணிசமாகக் குறைந்து விற்பனை செய்யப்பட்டது.

அதன்படி, கிலோ அளவில் வஞ்சரம் ரூ.1,400-லிருந்து ரூ. 800-ஆகவும், பாறை ரூ. 600-லிருந்து ரூ. 400-ஆகவும், விரால் ரூ.500-லிருந்து ரூ. 400 -ஆகவும், நண்டு ரூ.500-லிருந்து ரூ. 400-ஆகவும், இறால் ரூ.500-லிருந்து ரூ. 350-ஆகவும், சீலா ரூ.400-லிருந்து ரூ. 300-ஆகவும், சங்கரா ரூ.350-லிருந்து ரூ. 250-ஆகவும், நெத்திலி ரூ.350-லிருந்து ரூ. 300-ஆகவும், மத்தி ரூ. 250-லிருந்து ரூ. 180-ஆகவும் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.