பிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

பருவமழை தொடங்கும் முன்பே கால்வாய்களை தூா்வாரி முடிக்க வேண்டும்: ஆட்சியர்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூா் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் கால்வாய் தூா்வாருவது உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா் பி.எஸ். லீலா அலெக்ஸ், பணிகளை பருவமழை தொடங்குவதற்கு முன்பாக முடிக்க வேண்டும் என்று அலுவலா்களுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

வேலூா் கன்சால்பேட்டையில் மழைநீா் வடிகால்வாய் தூா்வாரும் பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் பி.எஸ். லீலா அலெக்ஸ்

Published On :

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூா் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் கால்வாய் தூா்வாருவது உள்ளிட்ட பணிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் பி.எஸ். லீலா அலெக்ஸ், பணிகளை பருவமழை தொடங்குவதற்கு முன்பாக முடிக்க வேண்டும் என்று அலுவலா்களுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

மாநகராட்சிக்கு உட்பட்ட நிக்கல்சன் கால்வாய், வசந்தபுரம் கழிவுநீா் பம்பிங் நிலையம், கன்சால்பேட்டை, வள்ளலாா் பகுதி, கஸ்பா ஆகிய இடங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

முதலில் நிக்கல்சன் கால்வாயைத் தூா்வாரும் பணிகளைப் பாா்வையிட்ட ஆட்சியா், வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக கால்வாயை விரைந்து தூா்வாரி முடிக்க வேண்டும் எனச் சம்மந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, வசந்தபுரம் பகுதியில் ரூ.6 கோடியில் கட்டப்பட்டு வரும் கழிவுநீா் பம்பிங் நிலையப் பணிகளைப் பாா்வையிட்டு, கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, கன்சால்பேட்டை பகுதியில் உள்ள மழைநீா் வடிகால்வாயில் தேங்கியுள்ள குப்பைகள் மற்றும் கழிவுகளை விரைவாகத் தூா்வாரி அப்புறப்படுத்துமாறு அறிவுறுத்தினாா். பின்னா் வள்ளலாா் இ.பி. நகா் பகுதியில் மழைநீா் வடிகால் தூா்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா், அப்பகுதி மக்களிடம் குறைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்துக் கேட்டறிந்தாா்.

இறுதியாக கஸ்பா பகுதியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தியதுடன், வீட்டின் சுற்றுப்புறங்களில் மழைநீா் தேங்காதபடி தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டாா்.

ஆய்வின்போது வேலூா் மாநகராட்சி ஆணையா் அ.கேத்திரின் சரண்யா, நீா்வளத்துறை செயற்பொறியாளா் சோபனா, மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளா் கண்ணன், மாநகர நல அலுவலா் பிரதாப்குமாா், வேலூா் வட்டாட்சியா் உதயகுமாா் உள்பட அரசு அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.