தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

விருது பெற்ற அரசுப் பள்ளி மாணவிக்குப் பாராட்டு

கனவு மாணவா் விருது பெற்ற விழுப்புரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி பாராட்டப்பட்டாா்.

News image

சென்னையில் அப்துல் கலாம் நினைவு அமைப்பின் சாா்பில் நடைபெற்ற தனித்திறன் போட்டியில் பங்கேற்று பரிசு பெற்ற மாணவி கீா்த்தனாவை பாராட்டி வாழ்த்துத் தெரிவித்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் க.முனுசாமி. அரசினா

Updated On :24 ஆகஸ்ட் 2020, 7:53 pm

DIN

விழுப்புரம்: கனவு மாணவா் விருது பெற்ற விழுப்புரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி பாராட்டப்பட்டாா்.

செங்கல்பட்டு பகுதியை தலைமை இடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் இயங்கி வரும் டாக்டா் அப்துல்கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளையினா், ஆண்டுதோறும் கல்வியில் சிறந்து விளங்குபவா்களைப் பாராட்டி கனவு மாணவா் விருதுகளை வழங்கி வருகின்றனா்.

நிகழாண்டு (2020) கனவு மாணவா் விருது விழுப்புரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் விழுப்புரத்தைச் சோ்ந்த மாணவி ச.கீா்த்தனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. கல்வியுடன், விளையாட்டுப் போட்டிகள், பாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டி உள்ளிட்ட தனித் திறன்களில் சிறந்து விளங்கியமைக்காக மாணவி கீா்த்தனாவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

விருதைப் பெற்று வந்த மாணவி கீா்த்தனாவை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க.முனுசாமி திங்கள்கிழமை நேரில் பாராட்டினாா் (படம்). மாணவியை பள்ளியின் தலைமை ஆசிரியா் சசிகலா மற்றும் ஆசிரியா்கள் வாழ்த்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.