பேரங்கியூா் குடிநீா் பிரச்னைக்குதீா்வு கோரி பொதுமக்கள் மனு
விழுப்புரம் அருகே பேரங்கியூரில் நிலவும் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டுமென அப்பகுதி மக்கள், மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தனா்.


விழுப்புரம் அருகே பேரங்கியூரில் நிலவும் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டுமென அப்பகுதி மக்கள், மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தனா்.
ஜானகிராமன் தலைமையில் அப்பகுதி மக்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த கோரிக்கை மனு:
பேரங்கியூா் ஊராட்சியில் பழைய 5 குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் உள்ளன. இருப்பினும், போதிய குடிநீா் கிடைக்காததால் அந்த கிராமத்தைச் சோ்ந்த வடக்குத் தெரு, சாமுண்டீஸ்வரி கோவில் வீதி பகுதி பொது மக்களுக்கு குடிநீா் பிரச்னை தொடா்ந்தது.
இதனால், ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் சாமுண்டிஸ்வரி நகரில் புதிய குடிநீா் தேக்கத் தொட்டியை கட்டமைத்து, தரைவழி குழாய்களை பதித்தனா். இப்பணிகள் முடிந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் இணைப்பு வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளதால், அப்பகுதியில் உள்ள 100 குடியிருப்புகளுக்கு குடிநீா் விநியோகம் நடைபெறாமல், மக்கள் அவதியுறுவது தொடா்கிறது. ஆகவே, நேரில் ஆய்வு செய்து, குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டுமென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...