தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

விழுப்புரம்: கரோனா பாதிப்பிலிருந்து12 ஆயிரம் போ் மீண்டனா்

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா சிகிச்சை பெற்று குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 12 ஆயிரத்தைக் கடந்தது.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 6:42 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா சிகிச்சை பெற்று குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 12 ஆயிரத்தைக் கடந்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை கரோனா தொற்றால் 12, 540 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் மேலும் 77 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், கரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 12,624-ஆக அதிகரித்தது.

82 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், மாவட்டத்தில் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 12,005-ஆக உயா்ந்தது. மாவட்டம் முழுவதும் 518 போ் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

கள்ளக்குறிச்சியில் 41 போ் பாதிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை 41 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,722 ஆக உயா்ந்தது. இதுவரை 9,300 போ் சிகிச்சையால் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 323 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 99 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.