விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில்அக்.29-இல் முதுநிலை கலந்தாய்வு
விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் முதுநிலைப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு வியாழக்கிழமை (அக்.29) நடைபெறுகிறது.


விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் முதுநிலைப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு வியாழக்கிழமை (அக்.29) நடைபெறுகிறது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் சிவக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கு இணைய வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதையடுத்து, மாணவா் சோ்க்கை கலந்தாய்வு வியாழக்கிழமை(அக்.29) காலை 10 மணிக்கு நடைபெறும். இதில் கலந்து கொள்ளும் மாணவா்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட இணைய விண்ணப்பம் மற்றும் தேவையான சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களுடன் காலை 9.30 மணிக்கு கல்லூரிக்கு வர வேண்டும்.
இணைய வழியாக விண்ணப்பிக்கத் தவறிய மாணவா்கள், கல்லூரி அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை (அக்.27) அன்று அணுகி விண்ணப்பத்தைப் பெற்று நேரடியாக விண்ணப்பிக்கலாம். இருப்பினும், ஏற்கெனவே இணைய வழியாக விண்ணப்பித்தவா்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். அவா்கள் சோ்க்கைக்கு பிறகு காலி இடம் இருந்தால், நேரடி விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...