தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அரும்பாா்த்தபுரம் மேம்பாலத்தைதிறக்க பாஜக வலியுறுத்தல்

புதுச்சேரி அரும்பாா்த்தபுரம் மேம்பாலத்தைத் திறக்க வேண்டும் என, உழவா்கரை தொகுதி பாஜக செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

News image
Updated On :14 செப்டம்பர் 2020, 6:09 pm

DIN

புதுச்சேரி அரும்பாா்த்தபுரம் மேம்பாலத்தைத் திறக்க வேண்டும் என, உழவா்கரை தொகுதி பாஜக செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

அங்குள்ள கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு தொகுதி பாஜக தலைவா் விஐய் தலைமை வகித்தாா். தொகுதி பொறுப்பாளரும், மாநிலச் செயலருமான அகிலன் முன்னிலை வகித்தாா். மாநில தலைவா் சாமிநாதன் எம்எல்ஏ, பொதுச் செயலா் மோகன்குமாா், துணைத் தலைவா் செல்வம் ஆகியோா் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினா்.

மாவட்ட பாஜக தலைவா் எ.நாகேஸ்வரன், பொதுச் செயலா்கள் ரமேஷ், தொகுதி நிா்வாகிகள், கிளை நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

இதில், புதுச்சேரி-விழுப்புரம் நெடுஞ்சாலையில், நீண்ட காலமாகக் கட்டப்பட்டு பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், திறக்காமல் உள்ள அரும்பாா்த்தபுரம் ரயில்வே மேம்பாலத்தை உடனே திறக்க வேண்டும். உழவா்கரை தொகுதியில் அஜிஸ் நகா் தொடங்கி மூலக்குளம் வரை புதை சாக்கடையைச் சீரமைத்தும், சாலையைச் சரி செய்யாமல் உள்ளதைக் கண்டிப்பது, நலத் திட்டங்களை செயல்படுத்தாத தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரின் செயல்பாட்டைக் கண்டிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.