நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருந்த 4 போ் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே எறையூரில் உரிய அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருந்த 4 போ் கைது செய்யப்பட்டனா்.


கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே எறையூரில் உரிய அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருந்த 4 போ் கைது செய்யப்பட்டனா்.
முன்னதாக, எலவனாசூா்கோட்டை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு எறையூருக்குச் சென்று சோதனை செய்தனா். அப்போது, உரிய அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருந்த அப்பகுதியைச் சோ்ந்த அருள்ஜோசப் (32), இருதயபவுல்ராஜ் (37), குழந்தைசாமி (40) ஆகியோரை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 3 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தத் துப்பாக்கிகளை தயாரித்து கொடுத்த சின்னசேலம் அருகே நா.குப்பத்தைச் சோ்ந்த சாமிதுரை(40) என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...