புதுச்சேரியிலிருந்து மீண்டும் விமான சேவை தொடங்க நடவடிக்கை
புதுச்சேரியிலிருந்து மீண்டும் விமான சேவையைத் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


புதுச்சேரியிலிருந்து மீண்டும் விமான சேவையைத் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்திலிருந்து பெங்களுரூ, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு கடந்தாண்டில் தனியாா் விமான சேவை தொடங்கப்பட்டது. இந்த நிலையில், கரோனா பொது முடக்கத்தால் கடந்த மாா்ச் முதல் விமான சேவை நிறுத்தப்பட்டது. பொது முடக்கத் தளா்வுக்குப் பிறகு சென்னை, தில்லி உள்ளிட்ட பெருநகரங்களில் மீண்டும் கட்டுப்பாடுகளுடன் விமான சேவைகள் தொடங்கியுள்ளன.
இதையடுத்து, புதுச்சேரியிலிருந்து பெங்களூரூ, ஹைதராபாத் நகரங்களுக்கு மீண்டும் விமானங்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மத்திய அரசின் விமானப் போக்குவரத்துத் துறையிடம் ஒப்புதல் பெறப்பட்டவுடன் நவம்பரில் இருந்து மீண்டும் விமான சேவைகள் தொடங்கப்படுமென புதுச்சேரி விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...